ராமநாதபுரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற கைதியை காவல் நிலையத்தில் சுட்டுக் கொன்ற எஸ்.ஐ. காளிதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி பட்டினத்தைச் சேர்ந்த சையது முகம்மது என்பவரை, விசாரணைக்காக எஸ்.பி.பட்டினம் காவல்நிலைய எஸ்.ஐ. காளிதாஸ் (14ஆம் தேதி) அழைத்துச் சென்றார். இதையடுத்து, காவல் நிலையத்தில் நடந்த விசாரணையின்போது, சையது முகமது கத்தியால் எஸ்.ஐ.யை தாக்க முயன்றதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து, எஸ்.ஐ. காளிதாஸ் தனது துப்பாக்கியால் சையது முகமது சுட்டுள்ளார். இதில் சையது முகமது சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சையது முகமதுவை சுட்டுக்கொன்ற் எஸ் .ஐ. காளிதாஸை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகணன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, சுட்டுக்கொல்லப்பட்ட சையது முகமதுவின் உடல் தடயவியல் மருத்துவர்கள் வருகைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கத்தி குத்தில் காயமடைந்த எஸ்.ஐ.காளிதாஸ் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நீதிபதி நேரில் விசாரணை இதனிடையே, விசாரணை கைதி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வேலுச்சாமி, நேரில் விசாரணை நடத்தினார்.
நன்றி: vikatan

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது