உத்தரபிரேதசம் மாநிலம் மொராதபாத் வகுப்பு கலவரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நகராகும். அங்கு நடந்த சோக சம்பவத்தில் மத நல்லிணக்கம் மலர்ந்து மனிதம் தழைத்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சாலையில் நடந்து சென்ற போது திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியில் சுமன் என்ற பெண் தவறி விழுந்து விட்டாள். இதனை நேரில் கண்ட முஸ்லிம் வாலிபர்கள் தானிஷ்(16) மற்றும் நாமன் ஆகியோர் அப்பெண்னை காப்பாற்றும் நோக்கத்தில் அவர்களும் சாக்கடையில் குதித்துள்ளனர். துரதிஷ்சடவசமாக இருவரும் அதில் சிக்கினர். உடனடியாக மீட்டு படையினர் வரவழைக்கப்பட்டு குழியில் விழுந்த மூவரையும் பிணமாக மீட்க முடிந்தது. ஒருவரின் உயிரை காப்பற்ற தன்னுயிர் நீத்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இவர்களின் இறுதி ஊர்வலத்தில் அனைத்து மதத்தினரும் கண்ணீருடன் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது