இந்திய சுதந்திர போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி மரணம்....!

2


நேதாஜி சுபாஷ் சந்திர போசின் இந்தியன் நேஷனல் (INA)  ஆர்மியில் கேப்டனாக பணியாற்றிய இந்திய சுதந்திர போராட்ட வீரர் - நாட்டின் உண்மையான கேப்டன் அப்பாஸ் அலி அவர்கள் இயற்க்கை எய்தினார்.

அலிகார்: இந்திய சுதந்திர போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 94. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் இயங்கிய இந்தியன் நேஷனல் (INA) ஆர்மியில் கேப்டனாக பணியாற்றியவர் அப்பாஸ் அலி.

இந்திய தேசிய விடுதலைக்காக உயிரை பணயம் வைத்து நடத்திய போராட்டத்தில், ஆங்கிலேய அரசு அவரை சிறையில் அடைத்து 1945ல் மரண தணடனை வழங்கியது. 1947ல் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் இந்திரா காந்தி அம்மையாரின் எமர்ஜென்சி பிரகடனத்தை எதிர்த்து லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாரயண் அவர்களுடன் சேர்ந்து தேசநலனுக்காக மீண்டும் போராடி கைது செய்யப்பட்டு, 1977ல் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உத்தர பிரதேச மாநிலம் அலிகார் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் மரணமடைந்தார். அவருக்கு ஒரு மகன் இரு மகள்கள் உள்ளனர்.

நாட்டில் கண்ட கண்ட சினிமா கூத்தாடிகளை கேப்டன் கேப்டன் என்ற அழைத்த நாவுகளுக்கும் கண்களுக்கும் - இவரை போன்றோர் உண்மையான கேப்டனாக தெரியவதில்லை. உண்மையில் நாம் கொடுக்க வேண்டிய மதிப்புகள் மரியாதைகள் தவறி போவாதால் என்னமோ - நாம் இன்னும் சுதந்திரம் பெற்றும் - இன்னலில் தவிக்கிறோம் என்று தோனுகிறது.
Advertisement

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    நம் நாட்டு தேச விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த எத்தனையோ இஸ்லாமியத் தியாகிகள் இருக்கிறார்கள். மறைக்கப் பட்ட வரலாற்றை உலகறியச் செய்வோம்.!நன்றி உள்ள நம் நாட்டு வீர மா மனிதர் தேசப் பற்று மிக்க இவரை ,இன்ஷா அல்லாஹ் இறைவன் சொர்க்கத்தில் சேர்ப்பானாக


    பல சரித்திர நிகழ்வுகளை எங்களோடு சேர்ந்து நினைவுகூர்ந்து வெளி ‎உலகுக்கு தெரியப்படுத்துவது ஒரு வகையில் தியாகமே.‎...

    ReplyDelete
  2. பல சரித்திர நிகழ்வுகளை எங்களோடு சேர்ந்து நினைவுகூர்ந்து வெளி ‎உலகுக்கு தெரியப்படுத்துவது ஒரு வகையில் தியாகமே.‎

    ReplyDelete
Post a Comment