FLASH NEWS: பட்டுக்கோடையில் பரபரப்பு! செல்போன் டவர் மேல் பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல் விடுக்கும் நபர்! (புகைப்படங்கள் இணைப்பு)

0


பட்டுக்கோட்டை காவல்நிலையில் உள்ள டெலிபோன் டவரில் இன்று மதியம் 1 மணியளவில் கையில் பெட்ரோல் பாட்டிலுடன் ஏறி ஒருவர் தற்கொலை முயற்சி.
பட்டுக்கோட்டை அறந்தாங்கி செல்லும் சாலையில் காந்தி சிலை அருகே தேவர் உணவகம் நடத்தி வரும் கருப்பையா என்பவரது கடையை , நேற்று இரவு பந்தோபஸ்திற்கு சென்ற 10க்கும் மேற்பட்ட போலீஸார் சென்று தாக்கி உடைத்து கடையை நேரத்தோடு பூட்ட வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது கடையை தாக்கிய காவல்துறையினர் அனைவரும் தன்னிடம் மைக் மூலம் மண்ணிப்பு கேட்டால் தான் டெலிபோன் டவரை விட்டு கீழே இறங்கி வருவேன் , இல்லை என்றால் தான் கையோடு கொண்டு சென்ற பெட்ரோலை தன் மீது ஊற்றி பற்றவைத்துக்கொள்வேன் என கூறி மிரட்டி வருவதால் அந்த பகுதியே பரப்பரப்பாக காணப்படுகிறது. காவல்நிலைய வளாகத்திற்குள் உள்ள கிட்டத்தட்ட 300 அடி உயரம் உள்ள டவரில் எப்படி ஏறினார் என்பது பொதுமக்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
தீபாவளியை முன்னிட்டு இரவு நேரம் சற்று கூடுதலாக கடையை நடத்திக்கொள்ள வர்த்தக சங்கம் சார்பில் சமீபத்தில் நடத்த ஆர்.டி ஓ தலைமையிலான கூட்டத்தில் அனுமதிக்கேட்கப்பட்ட சூழ்நிலையில் போலீஸார் இரவு நேரங்களில் அடாவடியாக கடைகளில் உள்ள சாமான்களை போட்டு உடைப்பதும் கடைக்காரர்களை அடிப்பதும் வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அனுமதி கேட்கப்பட்டும் தாக்குதல் நடத்தும் போலீஸாரிடம் பேசுவதற்கு கூட வர்த்தக சங்கம் வரவில்லை என்பது பாதிக்கப்பட்ட வர்த்தகர்களின் குறையாக இருக்கிறது என பொதுமக்கள் கூறுகின்றனர். தன்னை தாக்கிய காவல்துறையினர் தன்னிடம் மன்னிப்பு கேட்கும் வரை இறங்க மாட்டேன் என பலமணி நேரமாக டவரின் உச்சியில் தீப்பட்டி மற்றும் மண்ணெண்னையுடன் அந்தநபர் நிற்கிறார்.
பட்டுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் மற்றும் தீயனைப்புத்துறையினர் செய்வதறியாது டெலிபோன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த நபர் கையில் பெட்ரோல் வைத்து இருப்பதால் டெலிபோன் டவருக்கான கதிர்வீச்சின் மூலம் அது பற்றி எரிய அதிக வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீயனைப்புத்துறையினரிடம் வேண்டுகோல் விடுத்தனர்.




செய்தி :I.M.ராஜா 


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)