தற்போது இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் பெண்கள் வரை பலரும் போதை என்ற அரக்கணுக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் பல சாலை விபத்துகள் ஏற்பட்டு ஏராளமான உயிர்கள் நாள்தோறும் பரிகோகும் அவலம் உள்ளது. இதனை கருத்தில் கொண்ட அதிரையை சேர்ந்த சில சமுக அக்கரை கொண்டவர்கள் ஒன்றினைந்து ஒரு குறும்படத்தை உருவாக்கியுள்ளனர். அதிரையை சேர்ந்த யாரும் எடுக்காத முயற்ச்சியை இவர்கள் எடுத்துள்ளனர். இக்குறும்படத்துக்கு முகங்கள் என பெயர் வைத்துள்ளனர்.
இப்புதிய முயற்சியை மேற்கொண்ட இளைஞர்களை பாராட்டுவதில் அதிரை பிறை பெருமிதம் கொள்கிறது.
Advertisement


பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
நமதூரில் ஒரு சிலர், சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள், தங்களால் இயன்ற அளவு விழிப்புணர்வுகளை பல கோணங்களில் தூண்டி மக்கள் மத்தியில் எப்படியாவது ஒரு வீரிய நல்ல பாதையை அமைக்க வேண்டும் என்று அரும்பாடு படுகின்றனர்.
மேலும், அரும்பாடு பட்டு, இதுமாதிரி விளக்கங்களை குடும்படம் வாயிலாகவும் விளக்குகின்றனர். இவர்களுடைய நேர்மறையான சிந்தனையை பாராட்டாமல் இருக்க முடியாது.
ஆனால், இதையும் பொருட் படுத்தாது எதிர்மறையான சிந்தனையில் இருக்கும் பலரை நினைக்கும் போது, எப்படி விவரிப்பது என்றே புரியவில்லை.
இருந்தாலும், ஒரு நேரம் வரும், அந்த நேரம் முட்டி மோதி அலைக்களுக்கப் பட்டு ஒரு தெளிவுக்கு வரும்போது எதிர்மறையான சிந்தனைகள் அனைத்தும் பறந்து மறைந்து போகும்.
ஆனாலும், அதுவரைக்கும் பொறுமையுடன் இருப்பது ஆகாதது, மாறாக விழிப்புணர்வுகளை தூண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com