அபுதாபி யாஸ் மாலில் 14000 சதுர அடி பரப்பளவில் விளையாட்டு ராட்டிணமான ரோலர் கோஸ்டர் வடிவமைப்பில் உலகின் மிகப்பெரிய உணவகம் ஏற்படுத்தபட்டுள்ளது.
378 இருக்கைகளுடன் தானியங்கி தொழில்நுட்பத்தில் உணவு டேபிளுக்கு வருவதற்கு 30 ரோலர் கோஸ்டர் வடிவிலான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. உணவு ஆர்டர் செய்தால் நேரடியாக டேபிளுக்கு வரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு டேபிளுக்கும் தனி எண்கள் கொடுக்கப்பட்டு தனி தனியாக கம்ப்யூட்டர் தொடுதிரை அமைக்கப்பட்டுள்ளது.
அதில் அமரும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய உணவையும், இருக்கை எண் குறித்த தகவலையும் டேபிளிலுள்ள கணினியின் தொடுதிரையில் டைப் செய்து கார்டு மூலம் அதற்கான தொகையையும் செலுத்தி விட்டால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ரோலர் கோஸ்டர் வடிவிலான பாதை வழியாக சுற்றி ,சுற்றி தானியங்கி தொழில்நுட்பத்தில் ஆர்டர் செய்த உணவு முற்றிலும் பாதுகாப்பான பாத்திரத்தில் வாடிக்கையாளரின் டேபிளுக்கு வந்து விடும்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஹோட்டல் பணியாளர் உதவியின்றி வாடிக்கையாளர்கள் உணவை பெற முடியும். உலகின் வேகமான ரோலர் கோஸ்டர் ராட்டினம் அமீரகத்தில்தான் உள்ளது.எனவே பொருத்தமான வகையில் இந்த உணவகமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
நிச்சயம் இது குழந்தைகள் ,பெரியவர்கள் வாடிக்கையாளர்கள் கவரும் என உணவகத்தின் நிறுவனர்கள் தெரிவித்தனர். ஜெர்மனியில் இது போன்ற உணவகம் உள்ளது மேலும் சமீபத்தில் திறக்கப்பட்ட அபுதாபி யாஸ் மாலில் 60க்கும் மேற்பட்ட உலக புகழ்பெற்ற உணவகங்கள் உள்ளது குறிப்பிடதக்கது.
நன்றி : கிழக்கரை டைம்ஸ்.
Advertisement







1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது