
பரமக்குடியில் கண் குறைபாடு உள்ள இந்து மத சிறுமிக்கு இஸ்லாமிய இளைஞர்கள் நிதியுதவி செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு கண் குறைபாடு உள்ளது பற்றி கீழப்பள்ளிவாசல் இளைஞர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிறுமியின் சிகிச்சைக்கு நிதி திரட்டினர்.
திரட்டப்பட்ட நிதியை சிறுமியிடம் அளிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கீழப்பள்ளிவாசல் தலைவர் ஹாஜி எஸ்.என்.எம். முகம்மது யாக்கூப், எமனேஸ்வரம் காவல் நிலைய துணை ஆய்வாளர், ஆசிரியர் எம். புரோஸ்கான், ஆசிரியர் கே.ஏ. ஹிதாயத்துல்லா, அஸ்லம், ஜியாவுல் ஆகியோர் கலந்து கொண்டனர். காவல்துறை துணை ஆய்வாளர் நிதியுதவியை வழங்கினார்.
நன்றி :THATSTAMIL
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது