அதிராம்பட்டினம் கடல்பகுதியில் நண்டு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், மறவக்காடு ஆகிய பகுதிகளிலிருந்து பைபர் படகில் மீனவர்கள் மீன், நண்டு, இறால் பிடிப்பதற்கு கடலுக்கு செல்கின்றனர். தற்போது அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கடந்த 10 தினங்களாக மழை பெய்வதால் நெடுங்கால் நண்டு அதிக அளவில் மீனவர்கள் வலையில் அகப் பட்டு வருகிறது. நெடுங்கால் நண்டுகளை துறைமுக பகுதியிலேயே நண்டு வியாபாரிகள் விலைகொடுத்து வாங்கி செல்கின்றனர்.
வியாபாரிகள் நண்டு களை தூத்துக்குடி, சென்னை போன்ற பகுதி க்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு நண்டு களை அவித்து சதைகளை தனியாகவும், நண்டு கால் சதை களை தனியாகவும் பிரித்து டப்பாவில் அடைத்து சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா என பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். நெடுங்கால் நண்டுவிற்கு உலகஅளவில் நல்ல வரவேற்பு உள்ளது.
இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில் கூறுகையில், நெடுங்கால் நண்டு ஒரு படகிற்கு 5 கிலோவிலிருந்து 10 கிலோ வரையும் கிடைக்கிறது. 1 கிலோ 300 ரூபாய்க்கு விலை போகிறது. துறைமுக பகுதியிலேயே நண்டுகளை வியாபாரிகள் வாங்கி விடுகின்றனர். முதல் ரக நண்டுகளை எடுத்துக்கொண்டு வாட்டர் நண்டுகளை ஒதுக்கி விடுகின்றனர். உள்ளூர் மார்க்கெட்டில் குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர்.
நன்றி :தினகரன்
-FILE PHOTO
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது