சிகிச்சை பலனின்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் உயிரிழந்தார்!

0
  
ஆஸ்திரேலியாவில் நடந்த முதல் தர போட்டியான ஷெபீல்டு ஷீல்டு தொடரில் நியூ சவுத் வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சியான் அபோட் வீசிய பவுன்சரில், தெற்கு ஆஸ்திரேலிய அணி வீரர் பில் ஹியூஸ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே, சிட்னியில் உள்ள செயின்ட் வின்சன்ட் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவருக்கு, தலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின் கோமா நிலையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நவம்பர் 30ம் தேதி தனது 26வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் அவரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2009ல் தென் ஆசியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார்.
26 டெஸ்ட் போட்டி, 25 ஒரு நாள் போட்டி, ஒரே ஒரு 20-20 ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ளார் பில் ஹியூஸ்.


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)