சென்னையில் கட்சியின் கொடியை ஜி.கே.வாசன் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது:-
எங்களது புதிய இயக்கத்தின் கொடியை மிகவும் மகிழ்ச்சியோடு தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த கொடி மூவர்ணக் கொடியாகும்.
மேலே ஆரஞ்சு நிறம். நடுவில் வெள்ளை. கீழே பச்சை ஆகிய 3 நிறங்க ளும் கொண்டதாக இந்த கொடி இருக்கும். இதில் பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோரின் திருஉருவப் படங்கள் பொறிக்கப்பட் டுள்ளன.
இதுவே புதிய இயக்கத்தின் கொடி ஆகும். இது வலிமையான பாரதம், வளமான தமிழகம் என்பதை உணர்த்தும் வகையில் தேர்ந்து எடுத்துள்ளோம்.
இந்த கொடியில் இடம் பெற்றுள்ள ஆரஞ்சு நிறம் தியாகத்தை குறிக்கிறது. வெள்ளை நிறம் அமைதியையும் சமாதானத்தையும் குறிக்கிறது. பச்சை நிறம் பசுமை மற்றும் வளமையை குறிக்கிறது.
இந்த மூவர்ணக் கொடி தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்கள் முதல் மாநகர்கள் வரை பட்டொளி வீசிப் பறக்கட்டும். நமது புதிய இயக்க கொடியை ஒவ்வொருவரும் அவரவர் வாகனத்தில் பொருத்தி வர வேண்டும்.
புதிய கொடியை தொண் டர்கள் கையில் ஏந்தி எழுச்சியுடன் மாநாட்டில் பங்கேற்க வேண்டும்.நமது புதிய கட்சியின் பெயர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தின் சட்டத்துக்குட்பட்டு, கோட் பாடுகளுக்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புதிய கட்சி பெயரை 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருச்சி மாநாட்டில் அறிவிக் கப்படும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.
Courtesy: Daily thandhi

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது