கர்நாடகாவில் காவிரி ஆற்றுக்கு குறுக்கே அனைகட்டும் முயற்சியில் அம்மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது டெல்டா மாவட்டங்களாகும்.
எனவே இம்முயற்சியை கைவிடக்கோரி டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்துக்கு தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.
அதிரை மெயின் ரோட்டில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் அதிரை, தம்பிக்கோட்டை, தாமரங்கோட்டை பகுதிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் காளிதாஸ் அவர்கள் தலைமையில் கலந்துக்கொண்டனர். இதில் அதிரை சேர்மன் அஸ்லம், தி.மு.க மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ரத்தின பிரகாஷ் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
அதிரையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு அதிரை மெயின் ரோடு சமுதாய கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Advertisement









1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது