' சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை' ! ஏர் ஏசியா விமான விபத்தில் 40 உடல்கள் மீட்பு!

1


காணாமல் போன ஏர் ஏசியா விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஜாவா கடலில் விழுந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சோகத்தை சொல்லிக்கொள்ள வார்த்தைகள் ஏதுமில்லை என ஏர் ஏசியா தலைமை அதிகாரி தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தலையில் அடித்துக் கொண்டு அழுகை : ஏர் ஏசியா கடலில் தான் விழுந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலில் மிதக்கும் உடல்கள் தொடர்பான காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது வரை 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷியா கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சுர்பையா விமான நிலையத்தில், பலியான பயணிகளின் உறவினர்கள் குவிந்துள்ளனர். பயணிகள் இறந்துவிட்டனர் என்ற செய்தியை கேட்டதும், கூடியிருந்த பலர் தலையில் அடித்து கொண்டு அழுது கதறும் காட்சி அனைவரையும் நெஞ்சுருக செய்துள்ளது. பலர் சோகம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

' இந்த சோகத்தை சொல்லிக்கொள்ள வார்த்தைகள் ஏதுமில்லை ' என ஏர் ஏசியா தலைமை அதிகாரி தனது டுவிட்டரில இரங்கல் தெரிவித்துள்ளார்.


Debris floating in the Java Sea


Relatives at Surabaya airport react to the sighting of bodies - 30 December




Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இந்த சோகத்தை சொல்லிக்கொள்ள வார்த்தைகள் ஏதுமில்லை

    ReplyDelete
Post a Comment