மீத்தேன் திட்ட அலுவலகம் மூடல்...?

0

தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்காக இயங்கி வந்த திட்ட அலுவலகம் திடீரென காலி செய்யப்பட்டுள்ளது.
 தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் மீத்தேன் வாயுவை எடுக்க 'தி கிரேட் இஸ்டன் எனர்ஜி கார்ப்பிரேஷன்' என்ற நிறுவனம் பூர்வாங்க பணிகளை செய்து வருகிறது. இதற்காக தஞ்சாவூரில் கள அலுவலகம் அமைத்திருந்தது.

பொதுமக்கள், பத்திரிகைகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர்,  மீத்தேன் திட்டம் செயல்படுத்த கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், தஞ்சாவூரில் செயல்பட்டு வந்த இந்நிறுவன அலுவலகம் நேற்று திடீரென் காலி செய்யப்பட்டுள்ளது.

'மீத்தேன் எடுக்கும் திட்டத்தை அரசு கை விட்டு விட்டது. அதனால்தான், அலுவலகத்தை காலி செய்துவிட்டார்கள்' என்ற செய்தி இந்த பகுதியில் வேகமாக பரவி வருகிறது. ஆனால், 'தஞ்சாவூரில் உள்ள அலுவலகம் வாடகை கட்டடம். ஆகையால், காலி செய்கிறோம்' என்று தி கிரேட் இஸ்டன் எனர்ஜி கார்ப்பிரேஷன் அதிகாரி ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.





Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)