ரேஷன் கார்டில் 2015ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும் பணி இன்று காலை முதல் அதிரையில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தொடங்குகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு ரேசன் கடையிலும் சுழற்ச்சி முறையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அதிரையில் அனைத்து ரேசன் கடைகளிலும் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ரேசன் கார்டுக்கு 2015ம் ஆண்டுக்கான உள்தாளினை ஒட்டிச் செல்கின்றனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 95 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. தமிழகத்தில் 2005ம் ஆண்டுக்கு பிறகு புதிதாக இன்னும் ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக ஒரே ரேஷன் கார்டை மக்கள் பயன்படுத்தி வருவதால், அவை கிழிந்து தொங்கும் நிலையில் உள்ளது. மின்னணு ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதால் புதிதாக ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது