அதிரை பேருந்து நிலையம் முதல் பட்டுக்கோட்டை செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரம்!(படங்கள் இணைப்பு)

0


அதிரை பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது வந்தது. மேலும் மழை காலங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி குண்டும் குழியுமாக இருந்ததால் பல விபத்துகளும் ஏற்பட நேரிட்டது. இதனால் இந்த சாலை சீரமைக்க கோரி பொது மக்கள் பலர் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து  நெடுஞ்சாலை துறை சார்பில் அதிரை பேருந்து நிலையம் முதல் பட்டுக்கோட்டை செல்லும் சாலையை சீரமைக்க ₹ 1.50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையம் முதல் வண்டிப்பேட்டை வரை பழைய சாலை ஜேசிபி மூலம் பெயர்த்தெடுக்கப்பட்டது. தற்போது அதிரை மெயின் ரோட்டை ஒரு மீட்டர் அளவுக்கு அகலப்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியில் ஏற்படும் சாலை விபத்துக்களையும் வாகன நெரிசலையும் தவிர்க்கலாம்.





Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)