
உலக முஸ்லிம்களின் புனித பூமியான மக்கா நகரின் எல்லையில் மழை பொழிந்ததாகவும் அப்பொழுது வானத்திலே குதிரை ஒன்று பறந்ததாக சமூக வலைத்தளங்கள் வழியாகவும் வாட்ஸ் ஆப் வழியாகவும் ஒரு வீடியோ ஒன்று வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இது வதந்தீ ஆகும்.
இது இன்று வெளியிடப்பட்ட வீடியோ அல்ல, இது மூன்று ஆண்டுகளுக்கும் முன்பாக சில பெறால் ஜோடிக்கப்பட்டு வெளியிடப்பட்ட வீடியோ....
முஸ்லிம்களின் ஈமானை நேரடியாக சீர்குலைக்க முடியாத சில பேர் , முஸ்லிம்களின் ஈமானை சிதைப்பதற்கு நிறைய ஷைத்தானிய வேலைகளை செய்து வருகின்றனர்.
நாம் தொழக்கூடிய முஸல்லாவில் உருவத்தை பதிப்பது, மக்கா எல்லையில் குதிரை பறப்பது போன்று ஷைத்தானிய வேலைகளை செய்து முஸ்லிம்களின் ஈமானை பலகீனப்படுத்தும் வேலைகளை செய்துள்ளனர்.
திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் வார்த்தைகளில் குதிரை பறப்பது பற்றி எவ்வித முன்னறிவிப்பும் இல்லை.
திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய இரண்டை தவிர வேறு எதுவும் இஸ்லாம் அல்ல என்ற தெளிவான கொள்கையில் இருந்தால் இது போன்ற போலிகள் முஸ்லிம்களின் ஈமானை ஒருபோதும் எடை போட முடியாது.
அதன் பொய்யான விடியோவை இங்கே பார்க்கவும்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது