துபாய் மற்றும் குவைத் வாழ் அதிரையர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

0

24.11.2015-ம் தேதிக்கு பிறகு கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் செல்லாது என்பதால் அவற்றை புதுப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளும்படி குவைத், அமீரகம் உள்ளிட்ட வெளிநாட்டு வாழ் இந்திய தூதரங்கள் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து ஆணைய உத்தரவின்படி உலகம் முழுவதும் வினியோகிக்கப்பட்ட கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளுக்கு 24.11.2015--ம் தேதியோடு கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் 25- ம் தேதி முதல் கம்ப்யூட்டரால் பதிவு(நான் மெஷின் ரீடபிள் பாஸ்போர்ட்) செய்ய இயலாத அதாவது கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளுக்கு உலக நாடுகள் விசாக்கள் வழங்க மறுத்து விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கையால் எழுதப்பட்டு போட்டோ ஒட்டிய பாஸ்போர்ட்டுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு வினியோகிக்கப்பட்டன. அந்த பாஸ்போர்ட்டுகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய முடியாத பாஸ்போர்ட்டுகளாக கருதப்படுகின்றன. இந்திய அரசு கடந்த 2001-ம் ஆண்டு முதல் கம்ப்யூட்டர் பதிவு செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள் வினியோகித்து வருகிறது. கையால் எழுதப்பட்டு 24.11.2015-தேதிக்கு பின்னர் காலாவதியாகும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் கம்ப்யூட்டரால் பதிவு செய்யப்படும் பாஸ்போர்ட்டுக்கு (மெஷின் ரீடபிள் பாஸ்போர்ட்) விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இது குறித்து யுஏஇ, குவைத் உள்ளிட்ட வளைகுடாவில் உள்ள இந்திய‌ தூதரகங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இது போன்ற பாஸ்போர்ட் வைத்திருந்தால் உடனடியாக புதுபித்து கொள்ள‌ வேண்டுகோள் விடுத்துள்ளன. இதன் மூலம் விசா மறுக்கப்படுவது மற்றும் குடியுரிமை பிரச்சினைகளை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)