ஒரு இஸ்லாமியப் பெண் பர்தா அணிந்த நிலையில் தனது வீட்டுக் கதவினைத் திறக்கிறார் பக்கத்து வீட்டில் வசிக்கும் வயதான இந்து தம்பதியர் தங்களுடைய வீட்டு சாவிக்காக காத்திருப்பதை காண்கிறார் அந்த இஸ்லாமிய பெண்.
உடனே வீட்டு சாவி வரும் வரை தனது வீட்டில் வந்து அமரும்படி அவர்களை அழைக்கிறார்.
முதலில் தர்ம சங்கடமாக மறுக்கும் அந்த வயதான தம்பதியர் மூட்டுவலியை கருத்தில் கொண்டு அந்த இஸ்லாமியப் பெண்ணின் வீட்டில் வந்து அமர்கின்றனர்.
உபசரிக்கும் நோக்கில் அவர்களுக்கு அந்த இஸ்லாமியப் பெண் தேனீர் வழக்குகிறார். தேனீரின் சுவையை ருசித்த அந்த இந்துப் பெரியவர் இன்னொரு கப் கிடைக்குமா என்று கேட்க நிச்சயமாக கிடைக்கும் என அந்தப் பெண் கூறுகின்றார் அப்போது ஒற்றுமையின் சுவை எனும் முழக்கத்துடன் எழுத்தும் போடப்படுகின்றது த்ரீ ரோஸஸ் டீத்தூள் விளம்பரம்.
உலகில் எந்த நாட்டிற்கு கிடைக்காத சிறப்பம்சமான வேற்றுமையில் ஒற்றுமை என்ற சித்தாந்தம் இந்தியாவுக்கு மட்டுமே கிடைக்கப்பெற்றாலும் அந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலான ரோஜா, பம்பாய், துப்பாக்கி, விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களின் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், நடிகர் நடிகைகளும் கீழ் உள்ள த்ரீ ரோஸஸ் விளம்பரத்தை காண வேண்டும்.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது