தஞ்சை மாவட்ட அளவிலான கடற்கரை குழு விளையாட்டு போட்டிகள் வரும் 5ம் தேதி துவங்குகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் 2014- 15ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கடற்கரை குழு விளையாட்டு போட்டிகள் பட்டுக்கோட்டை தாலுகா புதுப்பட்டினம் வெளிவயல் கிராமத்தில் வரும் 5ம் தேதி நடக்கிறது. இதில் கடற்கரை வாலிபால், கடற்கரை கபடி மற்றும் கடற்கரை கால்பந்து போட்டிகள் இருபாலருக்கும் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. போட்டிகள் அனைத்தும் காலை 9 மணிக்கு துவங்குகிறது. மாவட்ட அளவிலான கடற்கரை குழு விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பெறும் அணியினர் மாநில போட்டியில் பங்கு கொள்வர்.
மாநில அளவிலான போட்டியில் கடற்கரை கால்பந்து விளையாட்டில் ஆண்கள் 5, பெண்கள் 5, கடற்கரை கபடி போட்டியில் ஆண்கள் 6, பெண்கள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டு சீருடைகள் வழங்கி அரசு செலவில் அழைத்து செல்லப்படுவர். மாவட்ட அளவிலான குழு போட்டியில் முதலிடம் பெறும் அணியில் உள்ள அனைவருக்கும் தலா ரூ.500, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.350, மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.200 பரிசு வழங்கப்படும்.
கடற்கரை கால்பந்து, கடற்கரை வாலிபால் மற்றும் கடற்கரை கபடி விளையாட்டில் ஆர்வமுள்ள மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரியில் உள்ள வீரர்கள் பங்கு பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது