நமதூர் ஆலடித் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி வாசல் வலது புறமாக சாக்கடை கால்வாய் உள்ளது. இது ஒரு கல்லால் மூடப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இது முதன் முறையல்ல இதற்க்கு முன்பு பல முறை இந்த பிரச்சனை இந்த பகுதியில் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
இன்று மதியம் முஹைதீன் ஜும்மா பள்ளிக்கு லுஹர் தொழுகைக்கு செல்லும் பொழுது சாலையெங்கும் இந்த கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள், மற்றும் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் சிரமத்திற்க்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இந்த பிரச்சனையால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு: இந்த பதிவு, இப்பகுதியில் இந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்ற நல்ல நோக்கில் பதியப்பட்டது. இது யாரையும் குறை கூறுவதற்க்காகவோ நிர்வாகத்தை தாக்குவதற்க்காகவோ பதியப்பட்டது அல்ல.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது