அதிரை சேர்மன் வாடி அருகே அமைந்து உள்ள ஆணை விழுந்தான் குளம் (யானையாம் குளம்) அதிரையின் மைய பகுதியில் உள்ள இந்த குளம் நமதூர் மக்களுக்கு பல ஆண்டு காலமாக நீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது .தற்போது சில வருடங்களாக தண்ணீர் இல்லாமல் வரண்டு கிடந்தது .தற்போது அதிரையில் பெய்த மழை காரணமாக தற்போது தண்ணீர் உடன் காட்சியளிக்கிறது.
ஆனால் இந்த குளம் முழுக்க குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது . இந்த குளம் சுகாதார சீர்கேடு ஏற்படும் அளவுக்கு குப்பைகள் நிரம்பி காணப்படுகிறது .தற்போது சொல்ல போனால் இந்த குளம் குப்பை தொட்டியாக மாறிவிட்டது எனலாம் .அதிரையில் உள்ள சில கோழிக் கடை கழிவுகளை இங்கு தான் கொட்டுகிறார்கள் . மேலும் இந்த குளம் அருகில் அரசு மருத்துவமனை ,தற்போது குழந்தைகளுக்கான சிறிய பள்ளி கூடம் ஒன்று ஆரம்பிக்கபட்டு உள்ளது.இந்த பகுதியில் செல்ல கூடியவர்கள் முகத்தை சுளித்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது .
அண்மை காலமாக இக்குளம் சரிவர பராமரிப்பு இல்லாத காரணத்தினாலும் ஆள் நடமாட்டம் குறைந்து காணப்படுவதாலும் இரவு நேரத்தில் சரிவர மின் விளக்கு இல்லாத காரணத்தினாலும் இந்த குளம் குற்ற செயல்களுக்கு உகந்த இடமாக உள்ளது .மேலும் இந்த குப்பைகளால் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது என அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர் .
பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இந்த குளத்தை சுத்தம் செய்யும்படி அதிரை பிறை சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் கேட்டு கொள்கிறோம் .
செய்தி மற்றும் புகைப்படம் :
காலித் அஹ்மத் (அதிரை பிறை நிருபர்)
Advertisement









1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது