பூமியின் நிலவுக்கும் சிறுகோள்களின் நிலவுகளுக்கும் என்ன வேறுபாடு?

ADIRAI YAS
0
நேற்று திங்கட்கிழமை பூமிக்கு அருகே வந்த சிறுகோளுக்கென  தனியானதொரு நிலவு இருப்பதை கண்டுபிடித்தி நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். தோராயமாக ஒரு பெரிய சொகுசுக்கப்பல் அளவுக்கு இருக்கும் இந்த சிறுகோளை நாசாவின் ராடார்கள் படம் பிடித்திருந்தன. அவற்றை ஆராய்ந்தபோது, 

அந்த சிறுகோளின் வெளிவட்டப்பாதையில் ஒரு நிலவு சுற்றிவருவதை தாங்கள் கண்டறிந்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த நிலவின் அளவு சுமார் ஏழு மீட்டர் அகலம் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து சுமார் 12 லட்சம் கிலோ மீட்டர்கள் தொலைவில் இந்த சிறுகோள் சென்றபோது இரவு வானத்தில் இது தெளிவாக
தெரிந்ததாக நாசா தெரிவித்துள்ளது. 

பூமிக்கும் நிலவுக்கும் இடையில் இருக்கும் தூரத்தைவிட இந்த தூரம் மூன்று மடங்கு அதிகமான தூரம். 200 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த சிறுகோள்
பூமிக்கு இவ்வளவு அருகில் வந்திருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளுக்கு இன்னொருமுறை வேறு எந்த சிறுகோளும் பூமிக்கு இவ்வளவு அருகில் வராது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு அருகில் இருக்கும் சிறுகோள்களில் சுமார் 16 சதவீத சிறுகோள்களுக்கு தனித்தனி நிலவுகள் இருப்பதாக வானியல் விஞ்ஞானிகள்  கண்டறிந்துள்ளனர். 

பூமியின் நிலவுக்கும், சிறுகோள்களின் நிலவுகளுக்கும் இடையில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதாக தெரிவித்தார் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் துணை இயக்குநர் முனைவர் சவுந்திர
ராஜ பெருமாள். அவரது செவ்வியின் ஒலி வடிவத்தை நேயர்கள்
இங்கே கேட்கலாம்.

-bbctamil.com

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)