இன்று நாடு முழுவதும் குடியரசு தின விழாவை கொண்டாடி வருகிறது. பலர் ஆங்காங்கே நடந்த கொடியேற்று விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வீட்டுக்கு சென்று விட்டனர். இத்துடன் நமது கடமை முடிந்து விட்டதா? இந்தியா குடியரசாகி இன்றுடன் 66 வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆனால் நம் பிறந்தது முதல் நம் நாட்டுக்காக, சுற்று புறத்திற்க்காக நாம் என்ன செய்தோம்?
இந்த கேள்விக்கு பலரது பதில் ஒன்றுமில்லை என்று தான் வரும். காரணம்! நமது வாழ்க்கை, நமது குடும்பம், நமது எதிர்காலம் என்ற சுயநல கொள்கையின் பாதையில் தான் மக்கள் பலரும் பயணிக்கின்றனர். இதனால் தான் நம் வீட்டில் சேரும் குப்பைகளை எதையும் யோசிக்காமல் பொதுநல சிந்தனையில்லாமல் வீட்டிலிருந்தே ரோட்டுக்கு வீசி எறிகிறோம். இதனை நாமும் கடந்து போகிறொம், நமது குழந்தைகளும் கடந்து போகின்றனர், இது போல் பொது மக்களும் கடந்து செல்கின்றனர் என்ற அக்கரை அனைவருக்கும் இருந்தால் நம் நாடு தூய்மை இந்தியாவாக மாறும்.
அந்த வகையில் தூய்மை இந்தியா திட்டத்தை அதிரையிலும் அறிமுகம் செய்யும் நோக்கில் நமதூர் இமாம் ஷாபி பள்ளி மாணவர்கள் ஊரில் மேலத்தெரு, நடுத்தெரு, கடற்கரை தெரு, சி.எம்.பி லேன், பழஞ்செட்டித் தெரு ஆகிய 5 தெருக்களில் உள்ள குப்பைகளை மாணவர்கள் அள்ளி வருகின்றனர். இந்த சிறிய வயதில் இப்பள்ளி மாணவர்களின் இந்த பொதுப்பணி பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த மாணவர்களை பார்த்தாவது பெரியவர்கள் சுற்று புறத்தை தூய்மையாக வைத்திருக்க முயற்சி செய்யலாம்.
மாணவர்களை இந்த முயற்சியில் ஈடுபட செய்த இமாம் ஷாபி பள்ளிக்கும், பள்ளி முதல்வருக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் அதிரை பிறை சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்கள் இது போன்று மேலும் பல பொது நல சேவைகளை பள்ளியின் மூலம் செயவதற்க்கு வாழ்த்துகிறோம்.
ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி
படங்கள்:காலித், பிலால்
Advertisement














1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது