சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் அவர்கள் கடந்த 23/1/2015 (வெள்ளிக்கிழமை) வஃபாத்தானார்கள். இவர்களின் உடல் எந்த வித ஆரவாரமுமின்றி அமைதியான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனை அடுத்து சவூதி அரேபிய தேசம் முழுவதும் இன்று மன்னர் அப்துல்லாஹ் மீது உள்ள மரியாதையின் காரணமாகவும் அன்பின் காரணமாகவும் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு நாள் பொது விடுமுறை கடைபிடிக்கப்படுகிறது.
என்றும் பரபரப்புடன் காணப்படும் சவூதி அரேபிய நகரங்களான ஜித்தா, ரியாத், தமாம், மக்கா, மதினா ஆகிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மன்னரின் பிரிவை தாங்க முடியாமல் மன்னர் மீது உள்ள அன்பை வெளி காட்டும் விதமாக இந்த விடுமுறை அங்கு விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது