குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்துகிறீர்களா? பெற்றோர்களே உஷார்...!

ADIRAI YAS
3
6 மாத குழந்தைகளுக்கு சளி,
ஜலதோஷம் ஆகிய பாதிப்புகள்
ஏற்படுவது சகஜம். ஆனால், இது போன்ற
பிரச்சனைகள் ஏற்படும்
போது மூக்கடைத்து, சுவாசிப்பதில்
சிரமம் ஏற்படும். அப்போது, நாம் அனைவரும் முதலில் கையில் எடுக்கும்
மருந்து தைலம் தான். ஆனால்,
குழந்தைகளுக்கு இதை
பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள்
உள்ளன.
சாதாரண தைலங்களில் கற்பூரம் முக்கிய மூலப்பொருளாக
பயன்படுத்துப்படுகிறது.
இதை குதந்தைகளுக்கு பயன்படுத்துவது
அதிகரிக்கும் போது பல்வேறு பக்க
விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
அதில், மிகவும் அதிக கற்பூர மூலப்பொருளை உள்ளடக்கிய
தைலத்தை குழந்தைகளுக்கு தடவும்
போது, சருமத்தில் எரிச்சல்
ஏற்பட்டு சிவக்க வாய்ப்புகள் உள்ளது.
அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு அதிக
கற்பூர தன்மை கொண்ட தைலத்தை பயன்படுத்துவதால்,
வலிப்பு நோய் பாதிப்பு ஏற்படவும்,
வாய்ப்புகள் அதிகம். அதிலும்,
ஒரு வயதுக்கு உட்பட்ட
குழந்தைகளுக்கு தைலம்
பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. 3 வயது வரை உள்ள
குழந்தைகளுக்கு சளி மற்றும் ஜலதோஷ
பாதிப்பு ஏற்படும் போது, ‘சலைன் நேசல்’
என்ற உறிஞ்சும்
சொட்டு மருந்தை பயன்படுத்துவது
மிகவும் நல்லது. மருத்துவரின் உரிய ஆலோசனை இல்லாமல்
குழந்தைகளுக்கு ஏற்படும்
நோய்களுக்கு பிற
மருந்துகளை பயன்படுத்துவது ஆபத்தில்
கொண்டு போய் விடும்.

Post a Comment

3Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. மிகவும் பயனுள்ள தகவல் தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  2. இது போன்ற மக்களுக்கு பயன்பெரும் வகையில் பயனுள்ள வகையில் தகவலினை பதிந்தமைக்கு நன்றி

    ReplyDelete
Post a Comment