துபாயில் தனியார் நிறுவனம் சார்பில், முதல் முறையாக ‘பாலிவுட் பார்க்ஸ் துபாய்’ என்ற பெயரில் ஒரு மிகப்பெரிய தீம் பார்க் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் துபாயில் மிகப் பெரிய அளவில், ‘பாலிவுட் பார்க்ஸ் துபாய்’ உருவாக்கப்பட்டு வருகிறது.
இது 2016ம் ஆண்டில் தயாராகிவிடும். இந்த தீம் பார்க்கில் இந்திய பாலிவுட் சினிமா தொடர்பான பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை அம்சங்கள் நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படுகிறது. துபாயில் உள்ள ஜெபெல் அலி பகுதியில் இந்த தீம் பார்க் சுமார் 30 லட்சம் சதுர அடியில் உருவாகிறது. இதற்காக துபாயிலுள்ள தனியார் நிறுவனம் மும்பையிலுள்ள 5 சினிமா நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த தீம் பார்க்கில் 16 வகையான அதிநவீன ராட்டின சவாரிகளும், பாலிவுட் படங்கள் தொடர்புடைய தீம் ஸ்டுடியோக்களும், பாலிவுட் படங்களின் இசை, காட்சிப்படங்கள், படங்கள், சினிமா போன்ற சூழ்நிலைகள் ஆகியவை இடம் பெறுகிறது.
இந்த தீம் பார்க்கிற்கு வருபவர்கள் கடைசி வரை உற்சாகத்துடன் அவர்களுக்கு பிடித்த பாலிவுட் சினிமா கதாபாத்திரங்களுடன் உரையாடல், செல்லும் இடமெல்லாம் திரையரங்குகள், உணவு விடுதிகள், ஏராளமான கடைகள் என அனைத்துமே உற்சாகத்தில் ஆழ்த்தும். முதன் முறையாக துபாயில் இது போன்ற ஒரு தீம் பார்க் அமைய உள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்றும், பார்வையாளர்கள் ஒரு புதிய அனுபவத்தை பெறுவார்கள் என்றும் தீம் பார்க் நிறுவனர்கள் தெரிவித்தனர்.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது