'மாற்றுக் கருத்தாளர்கள் நாடு திரும்ப வேண்டும்': மைத்திரி

ADIRAI YAS
0

இலங்கையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் ஊடக

சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக

வாக்குறுதி அளித்துள்ளதாக அரசாங்கத்தின்

பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் மாற்றுக் கருத்தாளர்கள்

நாடு திரும்பவேண்டும் என்றும் புதிய

ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர்

கூறினார். மாற்றுக்கருத்துள்ள இணையதளங்கள் மீதான

தணிக்கையை உடனடியாக நீக்குவதற்கும்

அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின்

தொலைபேசிகள்

ஒட்டுக்கேட்கப்படுவது நிறுத்தப்படுவதற்கும்

ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மாற்றுக் கருத்தாளர்களுக்கு இடமளிக்காமல்

அவர்களை ஒடுக்கியதாக பதவியிழந்து சென்றுள்ள

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது விமர்சனங்கள்

முன்வைக்கப்பட்டன. இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவின்

ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதும் ஊடக

நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு,

ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டதாக

சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள்

குற்றம்சாட்டி வருகின்றனர். பெருமளவிலான ஊடகவியலாளர்கள்

நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் ஊடக

சுதந்திரத்துக்கான அமைப்புகள்

சுட்டிக்காட்டியுள்ளன. 'மகிந்த இராணுவத்தின்

உதவியை நாடினார்' இதேவேளை, மகிந்த ராஜபக்ஷ தேர்தல்

தோல்விக்குப் பின்னரும் தொடர்ந்து ஆட்சியில்

இருப்பதற்கு இராணுவத்தின்

உதவியை கோரியிருந்ததாகவும்

அதற்கு இராணுவம் மறுத்துவிட்டதாகவும் புதிய

அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார். எனினும் இராணுவத்திடமிருந்து அதுதொடர்பில்

கருத்தெதுவும் கிடைக்கப்பெறவில்லை.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)