முஸ்லிம் மதத்துக்கு மாறிய நடிகை மோனிகா திருமணம் சென்னையில் இன்று நடந்தது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் மோனிகா திடீரென முஸ்லிம் மதத்துக்கு மாறினார். தனது பெயரையும் ரகீமா என மாற்றிக் கொண்டார். மதுரையை சேர்ந்த ஏற்றுமதி நிறுவன தொழில் அதிபர் மாலிக்கை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். மோனிகா–மாலிக் திருமணம் நந்தம்பாக்கத்தில் இன்று காலை நடந்தது. இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர்–நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் யாரும் பங்கேற்கவில்லை. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று மோனிகா அறிவித்துள்ளார்.



Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது