Dr.Pirai-குழந்தைகளுக்கு மரணத்தை ஏற்படுத்தும் சோஃபா!

0

வரவேற்பறையின் ஹீரோ, ஹாயாக தொலைக்காட்சிகள் பார்க்க உதவும் நண்பன், பெட்ரூம் போரடிக்கும்போது தூங்க உதவும் பெஸ்ட் ரூம் என்று மனதுக்கு நெருக்கமான ஓர் இடமாகவே சோபாவைப் பற்றி தோன்றும். ஆனால், ‘குழந்தைகள் தூங்கக் கூடாத ஓர் அபாய இடம்’ என்கிறது The Journal of Pediatrics என்ற இதழ். 

குழந்தைகளின் இறப்பு விகிதத்தை வைத்து நடந்த ஓர் ஆய்வின் முடிவில்தான்  சராசரியாக 8 குழந்தைகளில் ஒருவரின் மரணத்துக்கு சோபாவில் தூங்குவது காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூக்கம் தொடர்பான 9 ஆயிரத்து 73 குழந்தை மரணங்களில், ஆயிரத்து 24 குழந்தைகள் சோபாவில் தூங்கியபோது உயிர் இழந்திருக்கிறார்கள். இதில் 3 வயது வரை உள்ள குழந்தைகளின் மரணம் மிகவும் அதிகம். கீழே தவறி விழுவது, பெரியவர்கள் நெருக்கமாக அணைத்துக்கொண்டு தூங்கும்போது ஏற்படும் மூச்சுத்திணறல் ஆகியவை முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டிருக்கின்றன. 

இந்த அபாயங்களைத் தவிர்க்க குப்புறப்படுத்து உறங்கப் பழக்குவது, தொட்டில் பயன்படுத்துவது, குழந்தைகளை அவர்களுக்கான பிரத்யேக இடத்தில் தூங்க வைப்பது போன்ற வழிமுறைகளைக் கையாளவும் பரிந்துரைக்கிறது இந்த ஆய்வு. ஆதலால், குட்டித்தூக்கமாக இருந்தாலும் குட்டிப் பாப்பாவுக்கு அது கூடாத இடம் என்பதை மறக்க வேண்டாம்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)