DR.PIRAI-ரோஜா பூ வின் மருத்துவ குணங்கள்!

0

ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுடையது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். ரோஜா இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது. ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒரு கைப்பிடியளவு இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு தம்ளர் தண்ணீர்விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அதில் பாதி கசாயத்தில் சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலச்சிக்கல் விலகும். 

நீர்கட்டு உடையும், மூலச்சூடு தணியும். ரோஜா மொட்டுகளில் ஒரு கை அளவு கொண்டு வந்து ஆய்ந்து, அதை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியான தயிரில் போட்டுக்கெட்டு கலக்கி காலை வேளையில் மட்டும் குடித்து வர வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். 

பித்தம் காரணமாக கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி மற்றும் பித்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு சட்டியில் போட்டு, இரண்டு  தம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி காலையில் ஒரு டம்ளர் அளவும், மாலையில் ஒரு டம்ளர் அளவும் தேவையான அளவு சர்க்கரை  சேர்த்துக் கலக்கி குடிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் அறவே நீங்கிவிடும். இந்த சமயம் பித்தத்தை உற்பத்தி செய்யும் பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது. 

ஆய்ந்து எடுத்த ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு 150 கிராம் சுத்தமான தேனை அதில்விட்டு நன்றாக கிளறி வெயிலில் வைத்து விட வேண்டும். தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி மாலையில் ஒரு தேக்கரண்டி சாப்பிடவேண்டும். காலையில் வெயிலில் வைத்து மாலையில் எடுத்து வைத்துவிடவேண்டும்.

இதை இரத்தபேதி நிற்கும் வரை சாப்பிடவேண்டும். இதை தயாரிக்க சிரமமாக தோன்றினால் தமிழ் மருந்துக்கடைகளில் குல்கந்து என்று கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கி இதே அளவு சாப்பிட்டு வரவேண்டும்.

ஒரு சிலருக்கு அடிக்கடி தும்மல் வரும். இதை நிறுத்த ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை பாத்திரத்தில் போட்டு அரை தம்ளர் அளவு தண்ணீர் விட்டு சுண்டக்காய்ச்சி அந்த தண்ணீரை இறுத்து காட்டுச்சீரகத்தில் ஒரு தேக்கரண்டி அளவு அம்மியில் வைத்து அரைத்து ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டு வந்தால் தும்மல் நிற்கும். 


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)