அதிரை ECR - போஸ்ட் ஆபிஸ் ரோடு கால்வாய் அமைக்கும் பணி குறித்து சேர்மன் அஸ்லம் ஆய்வு!

2

அதிரை ECR சாலையில் இருந்து திலகர் தெரு வழியாக போஸ்ட் ஆபிஸ் தெரு தேவா ஜுவல்லரி வரை பல நாட்களாக கால்வாய் பிரச்சனையும் கழிவு நீர் தேங்கும் நிலையும் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த கால்வாய் தூர்வாரப்பட்டு கற்கள் சாலையிலேயே பல நாட்களாக கிடந்தது. இதனால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து பல முறை நமது அதிரை பிறை தளத்திலும் செய்திகளும் காணொளிகளும் பதிந்தோம். இந்நிலையில் இந்த கால்வாயை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களும் செயல் அலுவலரும் பார்வையிட்டனர்.

இது குறித்து சேர்மன் அஸ்லம் அவர்கள் நமது செய்தியாளரிடம் கூறியதாவது...இன்னும் மூன்று நாட்களுக்குள் இப்பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி துவங்கும் எனவும், இக்கால்வாயில் அடைத்திருக்கும் மண், கற்கள் அகற்றப்பட்டு வருகிறது எனவும் இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.






Advertisement

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. நல்ல வேலை, நல்ல வேளை

    ReplyDelete
  2. அல்ஹம்துல்லில்லாஹ்.

    ஜனாப் சேர்மன் அவர்களுக்கு நன்றி
    எக்களோட கோரிக்கை ஏற்று மிக விரைவில் பணியை தொடங்கியதற்கு நன்றி.
    முன்பு போல் பணியை பதியுடன் விட்டுவிடாமல், சிறப்பாக முடித்து தருமாறு அன்புடன் கேடுக்கொல்கிரன்.

    முஹம்மது ஷரீப்

    ReplyDelete
Post a Comment