LAWYER PIRAI- நுகர்வோர் சட்டம் மற்றும் உரிமைகள்!

0

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 (தி கன்சியூமர் புரட்டக்சன் ஆக்ட், 1986) இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பெற்றச் சட்டமாகும். ஜூலை 1, 1987 முதல் இச்சட்டம் அமலுக்கு வந்த்து.

இச்சட்டம் 1991 மற்றும் 1993 களில் திருத்தச் சட்டங்களாக வெளிவந்தன். நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், அதன் செயற்பாடுகள், முக்கியத்துவங்கள் அதிகரிக்கப்பட்டு டிசம்பர், 2002 இல் புதிய திருத்தச்சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, மார்ச் 15, 2003 புதிய பரிமானங்களுடன் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்த்தது.

இதன்படி வடிவமைக்கப்பட்ட விதிகள் நுகர்வோர் பாதுகாப்பு விதிகள், 1987 என அழைக்கப்படுகின்றன. இந்த விதிகள் மார்ச் 5, 2004 முதல் நாட்டுக்கு அறிமுகம் செய்யப்ப்ட்டது.

நுகர்வோரின் உரிமைகள்
கீழே காணப்படும் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இச்சட்டம் இயற்றப்பட்டது

உயிருக்கும் உடைமைகளுக்கும் தீங்கு விளைவிக்ககூடிய பொருட்களை சந்தைப்படுத்துவதில் இருந்து பாதுகப்பு பெறும் உரிமை.

நேர்மையற்ற வர்த்தக செயல்முறைகளில் இருந்து தங்களைப்பாதுகாத்துக் கொள்வதற்காக, சந்தையில் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், அளவு, தூய்மை, தரனிலை மற்றும் விலை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்வதற்கான உரிமை.

பலவகைப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை போட்டி விலைகளில் வாங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கான உரிமை.

நுகர்வோரின் குறைகளைக் கேட்பத்ற்கும் அவர்க்ளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உத்தரவாதம் பெறும் உரிமை.

நேர்மையற்ற வர்த்தகச் செயல்முறைகள் மற்றும் கட்டுப்படுத்தும் வர்த்தகச் செயல்முறைகள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான உரிமை.

நுகர்வோருக்கான விழிப்புணர்வினைப் பெறும் உரிமை.

நுகர்வோரின் சச்சரவுகளுக்கு விரைவாகவும் எளிமையாகவும் தீர்வு பெறும் உரிமை.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)