3 வார குழந்தை வயிற்றில் 10 வாரங்கள் வளர்ச்சியடைந்த இரட்டை குழந்தைகள்!

Irshad Bin Jahaber Ali
0

பிறந்த குழந்தையின் வயிற்றுக்குள் முழு வளர்ச்சியடைந்த கருப்பையும் அதனுள் இருந்த இரட்டைக் கருக்களும் ஹாங்காங் டாக்டர்களை திகைப்பில் ஆழ்த்திய ஆச்சரியத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஹாங் காங் நகரிலுள்ள பிரபல ராணி எலிசபெத் மருத்துவமனையில் ஒரு சீனத் தம்பதியருக்கு பிறந்த ஒரு பெண் குழந்தை, தனது வயிற்றுக்குள் இரட்டைக் குழந்தைகளை சுமந்திருந்ததை கண்ட டாக்டர்கள் பிரமிப்பில் ஆழ்ந்தனர்.

அந்த கருக்கள் 8 முதல் 10 வாரங்களாக சூல் கொண்டிருந்ததை அறிந்த டாக்டர்கள் அந்த கருக்களை நெருக்கமாக ஆய்வு செய்தபோது அவற்றுக்கு கால்கள், கைகள், ஒரு முதுகு, விலா மற்றும் குடல், தொப்புள் கொடி போன்ற முக்கிய உறுப்புகள் உருவாகி இருந்ததும், தோலால் மூடப்பட்ட அந்த இரண்டு கருக்கள் 14.2 மற்றும் 9.3 கிராம் எடை கொண்டிருந்ததும் புலனாகியது.

சமீபத்தில் ஹாங்காங் மருத்துவப் பத்திரிக்கை ஒன்றில், இந்த அதிசய தகவலும், இது தொடர்பான மருத்துவர்களின் ஆய்வு கட்டுரையும் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 லட்சம் குழந்தைகளில் ஒன்றுக்கு இப்படி நடக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், மருத்துவ வரலாற்றில் இதுவரை 200 முறை இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங் நகரில் உள்ள சீனப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், அந்நாட்டின் மகப்பேறியல் துறையியலின் பிரபல மருத்துவருமான டாக்டர் யு கேய்-மேன் இந்த அதிசயம் தொடர்பாக கூறுகையில், அந்தக் குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த கரு மிகவும் சிறியதாக இருந்ததால் அந்த தாய்க்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது அந்த குழந்தையின் வயிற்றுக்குள் கருப்பை இருந்ததையும், அவற்றுக்குள் இரு கருக்கள் வளர்ந்திருந்ததையும் கண்டறிய இயலாமல் போனது.

கருவுக்குள் வளரும் குழந்தைக்கு தானாக கர்ப்பம் தரிப்பது என்பது நடக்க இயலாத காரியம். எனினும், இந்த குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த கரு உருவாக காரணமாக ஒன்றை கருத முடிகின்றது. அந்த குழந்தை தனது தாயின் வயிற்றில் தரித்த பின்னர், அந்தக் கருவுக்குக் காரணமான தம்பதியர் தாம்பத்திய உறவில் ஈடுபட்ட வேளையில் தந்தையின் விந்தணுக்களானது, தாயின் வயிற்றில் ஓரளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்த அந்த பெண் குழந்தையின் கருவறைக்குள் நீந்தி சென்றதால் இந்த விளைவு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக குழந்தையின் தாய் பலமுறை கருக்கலைப்பு செய்ததும் இதற்கான மற்றொரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ராணி எலிசபெத் மருத்துவமனையில் கடந்த 2010-ம் ஆண்டு பிறந்த அந்தக் குழந்தைக்கு மூன்று வாரத்தில் நடத்தப்பட்ட வெற்றிகரமான அறுவை சிகிச்சையின் மூலம் கருப்பைக்குள் இருந்த 2 கருக்களும் அகற்றப்பட்டதாக அந்த மருத்துவ ஆய்வு கட்டுரை தற்போது தெரிவித்துள்ளது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)