ஒற்றை காலுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் அருணிமா சின்கா என்ற பெண்.
கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் திகதி உத்திர பிரதேச தலைநகர் லக்னோவிலிருந்து டெல்லி செல்லும் பத்மாவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார் தேசிய அளவில் வாலிபால் போட்டிகளில் பங்கேற்ற அருணிமா சின்கா(வயது 25).
அப்போது, அவர் இருந்த பெட்டியில் நுழைந்த கொள்ளையர்கள் பயணிகளைத் தாக்கி பணம், நகையைப் பறித்தனர்.இதைப் பார்த்த அருணிமா கொள்ளையர்களை விரட்ட தொடங்கினார். எனினும் கொள்ளையர்கள் அதிகம் பேர் இருந்த காரணத்தினால் அவரால் விரட்ட முடியவில்லை.
இந்நிலையில் அருணிமாவை சரமாரியாக தாக்கிய ஊழியர்கள், ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசினர். அடுத்த தண்டவாளத்தில் போய் விழுந்த அந்தப் பெண் மீது ரயில் ஏறியது. இறந்தே விட்டார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் வலது காலை மட்டும் இழந்தார். ஓராண்டு சிகிச்சை பெற்ற அந்த பெண் காலை இழந்தாலும், நம்பிக்கையை இழக்கவில்லை.
கொஞ்சமாக தொங்கிக் கொண்டிருந்த வலது காலில் செயற்கை காலை பொருத்தி இமயமலை மீது ஏறும் பயிற்சி பெற்றார். அதில் அவர் தேர்ச்சி பெறவே கடந்த ஏப்ரலில் “உலகின் மிகப் பெரிய சிகரம்” எவரெஸ்ட் மீது ஏறி சாதனை படைத்தார்.
இதன் மூலம் ஒரு காலை இழந்த எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் பெண் என்ற பெருமையை அருணிமா பெற்றார்.
அதற்குப் பிறகு உலகப் புகழ் பெற்ற அருணிமாவுக்கு பணம், புகழ் குவிய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கிடைத்த பணத்தைக் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி பள்ளி தொடங்க உள்ளார்.
இவரை போலவே எத்தனையோ மாற்றுத்திறநாளிகள் நம்மை சுற்றி - சாதித்து கொண்டும் , சாதிக்க முயற்ச்சி எடுத்து கொண்டும் ... ஒரு நாள் சாதித்து விடலாம் என்கிற எண்ணத்தோடும் வாழ்ந்து வருகின்றனர் ..
அவர்களுக்கு தேவை... அனுதாபம் அல்ல... அன்பும், வாய்ப்பும்..!!
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது