அதிரை பேருந்து நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை வரை புதிய சாலை அமைக்கும் பணிகளுக்காக ₹1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட கடந்த ஒரு மாதமாக அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. அதிரையில் பழைய சாலையின் அகலத்தையும் உயரத்தையும் அதிகரித்து நல்ல தரமான சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதிரை பேருந்து நிலையம் முதல் ஆலடிக்குளம் வரையிலான சாலை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையினால் சேர்மன் வாடி, மெயின் ரோடு, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளின் தோற்றமே மாறியுள்ளது. தரமாக அகலமாக பலபலப்புடன் அமைக்கப்படும் இந்த சாலையில் இனி வாகன ஓட்டிகள் எந்த வித இடையூறுகள் இன்றி சுமுகமாக பயணம் செய்யலாம். மழைக்காலத்தில் தண்ணீர் சாலையில் தேங்காத வண்ணம் இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அரசு No1 பள்ளி, பழஞ்செட்டித் தெரு பஸ் ஸ்டாப், இந்தியன் வங்கி, வண்டிப்பேட்டை ஆகிய பகுதிகளில் வேகத்தடைகளை அமைத்தால் விபத்துகளை தவிர்க்கலாம்.
Advertisement







1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது