தமிழகம் முழுவதும் தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்றும் ,இன்றும் நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து அதிரையில் இன்று காலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் காதிர் முகைதீன் கல்லூரி எதிரில் அதிரை நகர பொறுப்பாளர் M.M.S.அப்துல் கரீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் பாராளுமன்ற இளைஞர் அணி தலைவர் பிரபு , பட்டுக்கோட்டை தொகுதி இளைஞர் அணி செயலாளர் செந்தில், அதிரை நகர செயலாளர் சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர் .மேலும் இதில் இளைஞர் அணி உறுப்பினர்கள் இதயதுல்லாஹ், யாசர், பரீத்,விக்னேஷ்,சங்கர்,ஷாகுல் ஆகியோர் உடன் இருந்தனர் .
இந்த உறுப்பினர் சேர்கை முகாமில் ஏராளமானோர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர் . மேலும் கட்சியில் இணைந்த அனைவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது