துபாயில் உலகின் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து சம்பவத்தில் சேதம் குறித்தான உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
துபாயின் மேரினோ மாவட்டத்தில் உள்ள 79 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 50-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. 50-வது மாடியில் தீ பிடித்து எரிந்ததில் கட்டிடத்தில் இருந்த பொருட்கள் பிற மாடிகளின் மீது விழுந்தது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து தீயணைப்பு வண்டிகள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் யாரேனும் இருந்தார்களா என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.
தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதியில் இருந்த சாலைகள் அனைத்தும் மூடப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி இறுதியில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்தான தகவல் எதுவும் வெளியாவில்லை. தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாவில்லை. தீ விபத்து சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement







1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது