பட்டுக்கோட்டையில் பள்ளி மாணவன் தற்கொலை!

0

பட்டுக்கோட்டை மயில்பாலயம் பகுதியில் வசித்துவரும் பன்னிர்செல்வம், தமிழரசி தம்பதியரின் மகன் அபிநாத் (15) பட்டுக்கோட்டை பிருந்தாவன் பள்ளியில் 10ம் வகுப்பு தமிழ் மீடியம் படித்து வருகிறார். இவர் படிப்பில் சற்று பின் தங்கி இருந்ததால் பெற்றோர்கள் படிக்க அறிவுறுத்தியதால் கடந்தவாரம் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் அபிநாத். சக மாணவர்கள் தகவல் சொன்னதை அடுத்து காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது . 

இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் அபிநாத்தை காணவில்லை .  தற்கொலை செய்து இருப்பார் என்ற கோணத்தில் நேற்று நசுவினி ஆற்றில் தீயணைப்பு துறையினர் தேடினார்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலை அவரது உடல் பட்டுக்கோட்டை நசுவினி அணையில் மிதப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை போலீஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.   





Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)