காதுக்குள் பூச்சி நுழைந்தால்...
காதுக்குள் திடீரென ஏதேனும் ஒரு பூச்சியோ, எறும்போ நுழைந்து விட்டால் என்ன செய்வெதன்று தெரியாமல் திணறுவோம்.
அதற்கு ஒரு எளிய வழி உள்ளது.
அதாவது, காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டால் உடனடியாக காதினுள் எண்ணையையோ (தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்) உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.
இதனால், காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். பிறகு அதனை எடுத்து விடலாம்.
சிலர், பூச்சி காதுக்குள் போனதும் வெறும் தண்ணீரை ஊற்றுவார்கள். ஆனால், பூச்சிக்குத் தேவையான ஆக்ஸிஜன் தண்ணீரிலும் இருப்பதால் சில பூச்சிகள் இறப்பது இல்லை.
அதே போல, குழந்தைகளுக்கு காது தொடர்பான பிரச்சினைகளைத் தெரிந்து கொள்வது சற்று கடினமான வேலை தான்.
சில குறிப்புகளை வைத்து குழந்தைகளுக்கு காதில் பிரச்சினை உள்ளதை தெரிந்து கொள்ளலாம்.
காது கேட்பது மட்டுமே பிரச்சினை அல்ல. காதில் வலி, சீழ் வடிவது, கிருமி தொற்று போன்ற பல பிரச்சினைகள் ஏற்படலாம்.
இதனை கண்டறிய சில குறிப்புகள் :
தேவையில்லாமல் குழந்தை அழுது கொண்டிருந்தால் அதற்கு ஏதேனும் ஒரு பிரச்சினை இருக்கக் கூடும் என்று தெரிந்து கொள்வீர்கள். ஆனால் காதில் பிரச்சினை இருக்கிறது என்பதை, காதுக்கு அருகே உங்களது கைகளை வைத்து லேசாக வருடி விடுங்கள். அப்போது அழுகை குறைந்தால் பிரச்சினை காதில் என்பதை கண்டறிந்து விடலாம்.
காது என்பது மூக்கு, வாயுடன் தொடர்புடையது என்பதால், இவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் கூட காதினை பாதிக்கலாம். எனவே, மூக்கு மற்றும் வாயில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்பதையும் பாருங்கள்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது