10ம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!

Editorial
0

இந்தியாவின் மிக உயரிய பொறியியல் கல்வியாக விளங்கும், உலக பிரசித்திபெற்ற தொழில்நுட்ப கல்லூரிகளான மத்திய அரசின் ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற கல்லூரிகளின் நுழைவுத்தேர்வுக்கு முஸ்லிம் மாணவர்களை தயார்செய்யும் பொருட்டு MS Education Academy, RAHMANI-30 நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக செயல்படுத்தி வருகிறது. அதற்காக ஹைதராபாத் நகரில் இரண்டு வருடங்கள் (+1,+2) இஸ்லாமிய சூழலில், முழு இலவசமாக மாதம் ரூ 1000 உதவி தொகையுடன், தரம் வாய்ந்த தங்கும் வசதியுடன் மிக உயர்ந்த நோக்கில் கல்வி மற்றும் நுழைவுத்தேர்வு பயிற்சி தரப்படுகிறது.

அதற்கான தகுதி தேர்வு வரும் 12.04.2015 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. இத்தகுதி தேர்விலும், இவ்வருடம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வரும் 02.04.2015 க்கும் முன்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு மற்றும் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

*United Welfare Organazation (UNWO) – சென்னை.

*கடலூர் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் – கடலூர்.

தொடர்புக்கு 

எம்.ஏ. பத்ஹுத்தீன் : 9442441697

ஏ.ஆர். அஹமதுல்லா : 9789339022
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)