ஏப்ரல் 2-ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்பதாலும் அவ்விரு தினங்களுக்கும் விடுமுறை. அடுத்த நாள் ஏப்ரல் 4-ம் சனிக்கிழமை வங்கி அரைநாள் மட்டுமே செயல்படும். அதற்கு அடுத்த நாள் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை தினம் என அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவலால் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளுக்கு தொடர்ச்சியாக ஏழு நாட்கள் விடுமுறை விடப்பட்டால் தங்களால் பணப் பரிவர்த்தனை உள்பட எவ்வித வங்கி நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாது என மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி வட்டாரத்தில் விசாரித்தபோது வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் மட்டுமே விடுமுறை என தெரிவித்தனர்.
இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சிலர் கூறியது ஏப்ரல் 28-ம் தேதி ராமநவமி பண்டிகைக்கு தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது. மேலும் ஏப்ரல் 30-ம் தேதி வங்கிகள் வழக்கம்போல் இயங்கும். அடுத்த நாள் ஏப்ரல் 31-ம் தேதி நிதியாண்டின் இறுதி நாள் என்றாலும் கூட அன்று வழக்கம்போல் வங்கிகள் இயங்கும். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என வங்கித்ட துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மட்டுமே வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது