முஹம்மது நபியை அவமதிக்கும் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை பாடப் புத்தகத்தில் இணைப்பதற்கு டென்மார்க் ஆசிரியர் சங்கம் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கேலிச்சித்திரம் விரைவில் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று மதக் கல்வி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது .
இது தொடர்பில் கற்பது மத, சமூக மற்றும் அரசியல் விவகாரங்களுக்கு இடையிலான உறவை புரிந்துகொள்ள உதவும் என்று அந்த சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
கல்வித் திட்டத்தில் இந்த விஷயம் இன்னும் இணைக்கப்படாதது வியக்க வைக்கிறது என்று மேற்படி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோன் ரைடால் டென்மார்க் இணையத்தளம் ஒன்றிற்கு குறிப்பிட்டுள்ளார்.
டென்மார்க் அரசியல்வாதிகளில் சிலர் இந்த பரிந்துரைக்கு ஆதரவளித்துள்ளனர். வலதுசாரி டென்மார்க் மக்கள் கட்சி குறித்த கேலிச் சித்திரம் மதக் கல்வியில் உள்ளடக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
எனினும் பழைமைவாதிகள் மற்றும் மைய ஜனநாயகவாதிகள் இதனை கட்டாயப்படுத்துவதை எதிர்த்துள்ளனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு டென் மார்க்கின் ஜலான்ட்ஸ் போஸ்ட் பத்திரிகை பிரசுரித்த கேலிச்சித்திரத்திற்கு எதிராக முஸ்லிம் நாடுகளில் வன்முறை வெடித்ததும் குறிப்பிடத்தக்கது.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது