அதிரையில் கடந்த சில மாதங்களாக குளங்கள் நிறைந்து காணப்பட்டு வருகிறது. இதனால் பல வகைகளில் நமதூருக்கு நண்மை சேர்ந்தாலும் சில ஆபத்துக்களும் இருக்கவே செய்கின்றன. இன்று அதிரையை சேர்ந்த பள்ளி சிறுவர்கள் சிலர் பள்ளிக்கு செல்லாமல் சீருடையை கழட்டி வைத்து விட்டு செடியன் குளத்திற்கு சென்று ஆபத்தான குளியல் போட்டுள்ளனர்.
ஆழமான இக்குளத்தில் பெரியவர்களின் பாதுகாப்பின்றி பள்ளிக்கு செல்லாமல் கட் அடித்து விட்டு இவ்வாறு செய்துள்ளனர். கடந்த காலங்களில் குளங்களில் மூழ்கி நமதூரை சேர்ந்த பல சிறுவர்கள் உயிரிழந்தது இன்னும் ஆறாத வடுவாகவே உள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நம்பிக்கையுடன் பள்ளிக்கு அனுப்பினால் இவர்கள் தவறான நண்பர்களுடன் சேர்ந்து இப்படி ஆபத்தான விளையாட்டுக்களில் இறங்குகின்றனர்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் முறையாக நேரத்திற்க்கு பள்ளிக்கு செல்கின்றார்களா, பள்ளி முடிந்தவுடன் நேரத்திற்கு வீட்டுக்கு திரும்புகின்றார்களா, என்பதை நாள்தோறும் கண்கானிக்க வேண்டும். இவ்வாறு காண்கானித்தால் பள்ளி பருவத்தில் நமது பிள்ளைகள் தவறான பழக்க வழக்கங்களில் செல்வதை தவிர்ப்பது மட்டுமல்லாமல், வருங்காலங்களில் ஈருலகம் போற்றும் நல்ல பிள்ளைகளாக மாற்றலாம்.
ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி
படங்கள்: அதிரை ராஜா

Advertisement

SIRUVARGALAI SOLLI KUTRAM KAANA IYALATHU (ILAM KANDRU BAYAMARIYATHU.) APPAKKAM SELLUM PERIYAVARGAL KANDITTHAL NALLATHU. Thanku AP
ReplyDeleteThis is unwanted news
ReplyDelete