ஜப்பான் டோசிக்கன் நகரில் உள்ள ஆஷிகாஹா கம்யூனிட்டி கல்லூரியில் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் அதிரை மாணவர்களும் உண்டு. நமதூர் மேலத்தெருவை சேர்ந்த சம்சுல் ரஹ்மான், நடுத்தெருவை மொய்தீன்,அசாருதீன் ஆகியோர் மேற்படிப்பு படித்துவந்தனர்.மேற்ப்படிப்பு நிறைவு பெற்றதை அடுத்து இன்று ஆஷிகாஹா கம்யூனிட்டி கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அதிரையை சேர்ந்த மூன்று பேரும் பட்டச்சான்று பெற்றனர்.
பட்டச்சான்று பெற்ற அதிரை மாணவர்களுக்கு அதிரை பிறை வாழ்த்துக்களையும்,பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது.
Advertisement








வாழ்த்துக்கள் ....வாழ்த்துக்கள் ....வாழ்த்துக்கள் ....அல்ஹம்திளில்லாஹ் .
ReplyDeleteஎன்னுடைய அன்பு பிள்ளைகள் இந்த ஜப்பானிய பட்டங்களை பெறுவதற்காக அவர்கள் பட்ட சிரமங்களை நான் நேரில் அறிந்தவன் .
மேலும் இவர்களின் கல்லூரியில் பயின்ற பிள்ளை சலாஹுதீன் அவர்களிடம் நான் நீங்கள் படிப்பதை நேரில் பார்க்க ஆசைபடுகின்றேன் என கூற உடனே பிள்ளை சலாஹுதீன் என்னை அந்த கல்லூரியில் அறிமுகம் செய்து வைத்து ஒருநாள் இவர்கள் கூட நானும் அங்கே வகுப்பறையில் உங்கார்ந்து ஒரு மாணவனாக இருந்து வந்தேன்.
அல்ஹம்திளில்லாஹ் ...பிள்ளைகள் ஜப்பானிலும் மற்றும் அல்லாது அவர்களின் எதிர்காலத்தில் உலகெங்கும் மேலும் பல சாதனைகள் புரிய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அனைவரும் துஆ செய்யுவோம்.