அரபு எமிரேட் நாடுகளில் மிகவும் சிறிய ஊரான அஜ்மனில் செய்தித்தாள் வினியோகஸ்தராக பணியாற்றி வந்த இந்தியரான அபூபக்கர் பள்ளியாலில் என்பவர் கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கு நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கினார்.
விபத்தில் படுகாயமடைந்த இவரது கழுத்தின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டதால் உடலின் செயல்பாடு முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. அவர் மீது மோதிய கார் தவறான பாதையில் இருந்து வேகமாக வந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருமணமாகி மூன்றே மாதங்கள் ஆன நிலையில் வேலைக்கு சென்றபோது இந்த விபரீத விபத்து நேர்ந்ததால் பாதிக்கப்பட்ட அபூபக்கர் பள்ளியாலில் கேரளாவில் உள்ள சொந்த ஊருக்கு திரும்பிவந்து சேர்ந்தார். சரியாக பேச முடியாமல் சில வேளைகளில் சுயநினைவை இழந்து விடும் அவருக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கக்கோரி அஜ்மன் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. விபத்தில் பாதிக்கப்பட்டு கழுத்துக்கு கீழே உடலுறுப்புகள் செயலிழந்துப்போய் இருக்கும் அபூபக்கர் பள்ளியாலிலுக்கு 15 லட்சம் திர்ஹம் இழப்பீடு வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்குக்கான வக்கீல் சம்பளம் மற்றும் இதர செலவினங்கள் போக இழப்பீட்டு தொகையான 15 லட்சம் திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 2 கோடியே 55 லட்சம் ரூபாய்) அவரது இந்திய வங்கிக் கணக்குக்கு மாற்றம் செய்யப்பட்டது.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது