அவிசோ காப்பகம் மூடப்படவில்லை!நிர்வாகிகளின் தன்னிலை விளக்கம்!

0


அதிரையில் கடந்த 6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது அவிசோ மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நல காப்பகம். வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த காப்பகம் அதிரை அடுத்துள்ள ஏரிபுறக்கரை கிராமத்தில் 1 ஏக்கர் நிலப்பரப்பில் ₹55 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் கட்டிட பணி நிறைவுற்று விரைவில் திறப்பு விழா காணப்பட இருக்கிறது.

இந்நிலையில் அதிரை சேதுரோட்டில் இயங்கி வந்த அவிசோ காப்பகம் மூடப்பட்டதாக செய்தி வெளியாகியது. இது தொடர்பாக அவிசோ காப்பக நிர்வாகிகள் நம்மை தொடர்பு கொண்டு தன்னிலை விளக்கம் அளித்துள்ளனர். 

அதில் சேதுரோடு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தைகளுக்கு  இரண்டு மாதங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும், ஏரிபுறக்கரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், கட்டிட பணிகள் நிறைவுபெற்றவுடன் காப்பகம் விரைவாக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கட்டிட பணிக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். 

அவிசோ நிர்வாகிகள் வெளியிட்டுள்ள தன்னிலை விளக்கம்:









Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)