உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி
முன்னதாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த சுதாகர் என்பவர் இன்றைய ஆட்டத்தை டிவியில் பார்த்துள்ளார். ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவித்ததை பார்த்த அவர் கவலை அடைந்தார். உடனே அவர் இந்தியா வெற்றி பெற உதவுமாறு கடவுகள்களை வேண்டிக் கொண்டு கத்தியை எடுத்து தனது நாக்கை அறுத்துக் கொண்டார். வலியால் துடித்த அவரின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்து அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தேசப்பற்று இருக்கலாம், ஆஸ்திரேலிய அணி 328 ரண்கள் அடித்தால் நாக்கை அறுத்துக்கொள்வதா? நாக்கை அறுத்துக் கொள்வதால் தோல்வியடைந்த அணி வெல்லப் போகிறதா என்ன. இந்த தொடர் போனால் அடுத்து ஐ.பி.எல் அதுவும் போனால் அடுத்த தொடர் என வீரர்கல் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டு சென்று விடுவார்கள். இறுதியில் கஷ்டப்பட போவது யார்? இப்படி அற்ப காரணங்களுக்காக உடலை வதைத்துக் கொள்ளலாமா! இன்றைய இளைஞர்கள் எந்த பாதையில் செல்கிறார்கள் என்றே தெரியவில்லை!
-நூருல் இப்னு ஜஹபர் அலி(அதிரை பிறை)
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது