பட்டுக்கோட்டை அருகே அரசு பேருந்து விபத்து!

Irshad Bin Jahaber Ali
0

பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் கடைத்தெருவில் அரசு பேருந்து மற்றும் கார், நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரில் வந்த கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

அவர்களது மகன் அரவிந் என்பவர் கவலைக்கிடமான நிலையில் தஞ்சை மருததுவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மன்னை நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் (51) மன்னார்குடி நகராட்சி முன்னாள் அ.தி.மு.க., கவுன்சிலர். அவருடைய மனைவி இந்திரா (43) இவர்களுடைய மகன் அரவிந்த் (23).

இவர்கள் மூன்று பேரும், நேற்று முன்தினம், காரில் பட்டுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். மாலை, 3.30 மணிக்கு, ஆலத்தூர் கடைத்தெருவில் கார் வந்தபோது, எதிரில் வந்த அரசு பஸ் மோதியது.

இதில், காரில் உட்கார்ந்திருந்த மணிவண்ணன், அவரது மனைவி இந்திரா, இருவரும் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த அரவிந்தை, அருகிலுள்ளவர்கள் மீட்டு, தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.தகவல் அறிந்து வந்த, பட்டுக்கோட்டை போலீஸ் SI ஜவகர், விபத்து குறித்து விசாரிக்கிறார்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)