இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை விமர்ச்சித்து சவுதியில் இஸ்லாத்தின் பெயரால் பெண்ணுரிமைகள் பறிக்க படுவதாக குற்றம் சாட்டிய சுவீடனுக்கு எதிரான தனது கடுமையான நடவடிக்கைகளை சவுதி அரசு நேற்று முதல் ஆரம்பித்து விட்டது
சுவீடனை சார்ந்த வணிகர்களுக்கு புதிதாக எந்த வணிக விசாக்கைளையும் வழங்குவதில்லை என்றும் சவுதியில் வணிக விசாவில் தங்கியுள்ள சுவீடன் வணிகர்களுக்கான விசாவின் காலம் முடிந்து விட்டால் அந்த விசாக்களை புதிப்பது இல்லை என்றும் சவுதி அரசு நேற்று அறிவித்தது.
இது சுவீடன் வணிகர்களுக்கு மத்தியில் மிகபெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
சுவீடனின் வெளியுறவு துறை அமைச்சர் தேவை இல்லாமல் சவுதியை வம்புக்கு இழுத்து இஸ்லாத்தை விமர்ச்சித்திருப்பது பொருளாதார அடிப்படையில் சுவீடனுக்கு மிகுந்த இழப்புகளை உருவாக்கும். இந்த பிரச்சனையில் சவுதியிடம் உடனடியாக சுவீடன் அரசு சமரச பேச்சு வார்த்தையில் இறங்கி பிரச்சனைக்கு உடனடியாக முற்று புள்ளி வைக்க வேண்டும் என்றும் சுவீடன் தொழில் அதிபர்கள் சுவீடன் அரசை கேட்டு கொண்டுள்ளனர்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது