தமிழ்நாட்டைச் சேர்ந்த பணியாளரான சண்முகம், ஜூராங் ஈஸ்ட் என்ற இடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே பணியில் இருந்தார். அந்த நேரத்தில், அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் எதிர்பாராத விதமாக அந்த வீட்டைச் சேர்ந்த 3 வயது குழந்தை ஒன்று துணிகள் காய வைக்கும் வெளிப்புற ஜன்னல் வழியாக வெளியே தொங்கிய நிலையில் கதறிக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளார்.
தலை ஜன்னல் கம்பிகளில் சிக்கிக் கொண்டிருக்க ஆபத்தில் துடித்துக் கொண்டிருந்த குழந்தையை, உடனடியாக இரண்டாவது மாடிக்கு தாவி ஏறி மீட்டு உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
சண்முகத்திற்குப் பின்னால் அவரது நண்பரும் மாடியில் ஏறி உதவி செய்துள்ளார். பின்னர், அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலமாக சண்முகத்தையும், குழந்தையையும் பத்திரமாக கீழே இறக்கியுள்ளனர்.
அவர்கள் இருவருக்கும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை சார்பில் விருதுகள் வழங்கப்படும் என்ற தகவலை ‘தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் ஏற்பட்ட கலவரத்திற்கு பிறகு, அந்நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டவர்கள் மீது சிங்கப்பூரர்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டிருந்தது.
தொடர்ச்சியாக பேஸ்புக், டிவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களில் சிங்கப்பூரில் வசித்து வரும் வெளிநாட்டவர்களை வசை பாடி வந்தனர். ஆனால், அந்த சமயத்தில் அப்பிரச்சனையை சிங்கப்பூர் அரசாங்கம் மிகக் கவனமாக கையாண்டது என்றே கூற வேண்டும்.
சிங்கப்பூர் பிரதமரே, இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு வெளிநாட்டவர்களின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விளக்கி அவர்கள் மீதிருந்த களங்கத்தைப் போக்கினார்.
அதே வேளையில், தவறு செய்த வெளிநாட்டவர்களை மட்டும் நீதியின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்தது சிங்கப்பூர் அரசு. இந்நிலையில், சண்முகம் போன்று சிங்கப்பூரில் தங்கி பணியாற்றி வரும் வெளிநாட்டவர்கள் செய்யும் இது போன்ற நல்ல காரியங்கள், அவர்களுக்கு மட்டுமல்ல அவர்கள் பிறந்த மண்ணிற்கும் நல்ல பெயரைப் பெற்று தருவது குறிப்பிடத்தக்கது.
காப்பாற்றியவர்களில் ஒருவர் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்று வேலை செய்து வரும் சுப்பிரமணீயன் சண்முகநாதன் என்று தெரியவந்துள்ளது. மற்றொருவர் பொன்னன் முகுந்த் குமார் எனவும் தெரிய வந்துள்ளது.
குழந்தையைக் காப்பாற்றிய இருவரையும் சிங்கப்பூர் அரசின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படை, ‘உத்வேக மக்கள் விருது’ வழங்கி கவுரவித்தது.
Advertisement





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது